சீரியல் கில்லராக மாறிய திருநங்கை.. சாக்கடைக்குள் சிக்கிய சிறுவனின் பிணம்! மிரள வைத்த சம்பவம்
8 வயது சிறுவனை கொடூரமாக கொன்று சாக்கடையில் திருநங்கை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடு நடுங்கிய பகுதி மக்கள்
ஹைதராபாத்திலுள்ள சானத் எனும் நகரில் சாக்கடையில் மூட்டையொன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. அப்போது அந்த பக்கமாக வந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூட்டை மீட்டு விரித்து பார்த்த போது சிறுவனின் பிணம் ஒன்று கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரனை நடத்திய பொலிஸார் இதனை பக்கத்திலுள்ள திருநங்கையொருவர் தான் செய்துள்ளார் என சிசிடிவி பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த திருநங்கை இம்ரானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
தந்தையால் ஏற்பட்ட பகை
இந்த விசாரனையில், “ இம்ரானுக்கு வயிறு வலி என்று தந்தையிடம் ORS வாங்கி கொடுத்து விட சொல்லியிருக்கிறார். அதனை குறித்த சிறுவன் கொண்டு வந்துள்ளார்.
அப்போது அவரை அடித்து கொடுமைப்படுத்தி, தலையை தண்ணீரில் முக்கியப்படி கொலை செய்துள்ளார்.
மேலும் குறித்த சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட சிறிய சண்டையால் தந்தையை பலிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சிறுவனை கொன்றதாக ஓப்பு கொண்டுள்ளார்.
இந்த செய்தி அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. இது போன்று யாராலும் செய்ய மனசு வராது இவனுக்கு மனசாட்சி இல்லையா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.