சூட்கேஸில் பிணமாக கிடந்த பெண்…. 52 வயதில் திருமணம் முடித்து நான்காவது நாளே நடந்த அவலம்!
பிரித்தானியாவை சேர்ந்த 52 வயதான பாட்டி காதலித்து திருமணம் செய்து 4 நாட்களில் பிணமான சோகம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் டான் வாக்கர் என்ற 52 வயது பெண்ணான இவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 45 வயதான தாமஸ் நட் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 2020ல் இவர்கள் திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 4வது நாள் டான் வாக்கர் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது பிணம் சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூட்கேஸ் தாமஸ் நட் வசம் இருந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
52 வயதில் காதலித்து திருமணம் செய்த பெண் திருமணமான 4வது நாளே புதிய கணவனால் கொல்லப்பட்டு சூட்கேஸில் அடைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.