அப்பாவை தேடி அழுத சிறுவன்! தோளில் சுமந்து கொண்டு உதவிய மக்கள்...இருவரும் இணைந்த நெகிழ்ச்சி காட்சி
தந்தையை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு பொதுமக்கள் உதவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகின்றது.
இந்த சம்பவம் அர்ஜென்டினாவில் நடைபெற்றுள்ளது.
தந்தையுடன் வந்த சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி விட்டார்.
அதனால் தந்தையை தவறவிட்டுவிட்டுள்ளார்.
தந்தையுடன் இணைந்த சிறுவன்
உடனே அழுது கொண்டிருந்த சிறுவனை தோளில் சுமந்து அந்த சிறுவனின் தந்தை பெயரை சொல்லி கத்தினார்.
அவருக்கு ஆதரவாக அங்கிருந்த சிலரும் சேர்ந்து கத்துகின்றனர்.
பின்னர் சத்தம் கேட்டு சிறுவனின் தந்தை ஓடி வருகின்றார். பிறகு சிறுவன் தந்தையை கட்டிபிடிக்கிறான். உதவிய மக்களுக்கு இருவரும் அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறுகிறார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகின்றது.