சொகுசு பங்களா வைத்திருக்கும் டாப் 7 தென்னிந்திய நடிகர்கள்- மதிப்பு தெரிஞ்சா வாயடைச்சு போவீங்க!
சொகுசு மற்றும் விலையுயர்ந்த வீடுகளை வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்திய சினிமாக்களில் நாம் தினம் தினம் கண்டு மகிழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கை நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு சொகுசாக இருக்கும். அவர்களின் கார்கள், வீடுகள், ஆடைகள் அணிகலன்கள் இப்படி வரிசையாக கூறிக் கொண்டே போகலாம்.
திரைப்படங்கள் பிச்சைக்காரன்களாகவும், ஏழையாகவும், நடுத்தர குடும்ப மகனாகவும் வரும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கை ஆடம்பரம் நிறைந்ததாக உள்ளது.

அந்த வகையில், நாம் சினிமா படங்களில் பார்த்து வியந்து போகும் பிரபலங்களின் வீட்டின் பெறுமதியை நாம் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
1. தனுஷ்
தென்னிந்திய நடிகர்களில் தனுஷ் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய வீட்டின் மதிப்பு சுமாராக 150 கோடி ரூபாய் மதிப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

2. அல்லு அர்ஜுன்
புஷ்பா படத்தின் மூலம் பான்-இந்தியா ஸ்டாராக மாறிய நடிகர் அல்லு அர்ஜுன் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை வைத்திருக்கிறார்.

3. தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
இவரின் சொகுசு பங்களாவில் அனைத்து வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமாராக 80 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

4. பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் தான் வசித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

5. அக்கினேனி நாகார்ஜுனா
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான அக்கினேனி நாகார்ஜுனா இன்றும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இளைஞர்கள் மத்தியில் ரோல் மாடலாகவும் இருக்கிறார். இவரின் வீட்டின் மதிப்பு சுமாராக 42 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

6. ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், ஆன்மீகத்தில் ஈடுபட்டு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டின் மதிப்பு சுமாராக 35 கோடி ரூபாய் வரும் என்றும் கூறப்படுகிறது.

7. ராம் சரண்
90களில் இளைஞர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த சிரஞ்சீவி கின்னஸ் சாதனையாளராகவும் வலம் வருகிறார். அவருடைய மகன் ராம் சரன் இந்தியா முழுவதும் பெண் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராக இருக்கிறார். இவர் வீட்டின் மதிப்பு 30 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |