இது கொஞ்சம் புதுசா இருக்கே.. மகள் திருமணத்தை வசூல் நாயகனாக மாறிய தந்தை
கேரளாவில் மகள் திருமணத்தில் தந்தை புது விதமாக வசூல் வேட்டையை ஆரம்பித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியர்களின் கலாச்சாரம்
பொதுவாக இந்தியர்கள் திருமணத்தை பணம் வசூலிக்கும் ஒரு தருணமாகவே பார்க்கிறார்கள்.
அந்த சமயத்தை பயன்படுத்தி திருமணத்திற்கு வரும் விருந்தினர்களிடம் மொய்ப்பணம் வசூலிப்பது எமது பாரம்பரியங்களில் ஒன்றாக உள்ளது.
அந்த வகையில், கேரளாவில் நடந்த திருமணத்தில் மணமகளின் தந்தை மொய்ப்பணம் வசூலிப்பதற்காக QR குறியீட்டை அணிந்துக் கொண்டு நடமாடியுள்ளார்.

தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்ட குறித்த தந்தை, தன்னை தானே ஒரு நேரடி கட்டண விருப்பமாக மாற்றியிருக்கிறார்.
டிஜிட்டல் கட்டண கலாச்சாரம்
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளியில், மணமகளின் தந்தை புன்னகையுடன் மகிழ்ச்சியாக விருந்தினரை வரவேற்பதையும் சட்டை பாக்கெட்டில் அழகாக QR குறியீடு பொருத்தபட்டிருப்பதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் பரிசு உறைகளை ஒப்படைப்பதற்கு பதிலாக, குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களின் மொய்ப்பணத்தை கொடுத்து சென்றுள்ளனர்.
வைரலாகி வரும் காணொளியை பார்த்த இணையவாசிகள், “இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கே..” என அதிர்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும், தற்போது டிஜிட்டல் கட்டண கலாச்சாரம் மிகவும் பாரம்பரியமான நிகழ்வுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |