வீட்டில் தயாரித்த இஞ்சி-பூண்டு விழுது: நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்!
பொதுவாகவே இஞ்சி மற்றும் பூண்டு விழுது இந்திய உணவு வகைகளின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
சாதாரணமாக குழம்புகளில் ஆரம்பித்து பிரியாணி வரையில் இந்த மசாலாவைச் சேர்ப்பது ஒவ்வொரு உணவிற்கும் மாயாஜால சுவையைத் தருகிறது. இதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவை காரணமாக அதனை தவிர்து சமையல் செய்வதை பெரும்பாலானவர்கள் விரும்புவது கிடையாது.

இவ்வாறு நாம் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் இஞ்சி பூண்டு விழுதை கடைகளில் வாங்கிய பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்று கேட்டால் நிச்சயம் கேள்விக்குறி தான்.
காரணம் கடைகளில் வாங்கும் மசாலாப் பொருட்களில் சுவை, அமைப்பு மற்றும் புத்துணர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாதுகாப்புகள் மற்றும் ரசாயன சேர்க்கைகள் அதிகமாக கலக்கப்படுகின்றது.

இதனால் இஞ்சி பூண்டு விழுதில் இருந்தும் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆரோக்கிய நன்மைகளுக்கு பதிலாக பக்க விளைவுகளே அதிகமாக இருக்கும். அதனால்தான் வீட்டில் தயாரிக்கப்பட்ட இஞ்சி மற்றும் பூண்டு விழுதைப் பயன்படுத்துவதே சிறந்தது.
அவ்வாறு இஞ்சி- பூண்டு விழுதைச் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது மற்றும் நீண்ட காலத்துக்கு பாதுகாப்பது என்பது குறித்த எளிய வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் தயாரிக்கும் முறை
வீட்டில் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்க வேண்டும் என்றால் ஆரம்பத்தில், இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக கழுவி தோல் நீக்கி சம விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
1 கப் நறுக்கிய இஞ்சியை 1 கப் உரிக்கப்பட்ட பூண்டு பல் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். (100 கிராம் இஞ்சிக்கு 100 கிராம் பூண்டு) சத விகிதத்தில் இல்லாத போது விரைவில் கொட்டுப்போக வாய்ப்புள்ளது.

பேஸ்ட் செய்ய புதிய பூண்டு மற்றும் இஞ்சியை பயன்படுத்துவதை உறுதிசெய்துக்கொள்ளுங்கள். இரண்டும் நன்றாக சுத்தம் செய்யப்பட்டவுடன், அவற்றை ஒரு சமையலறை துண்டில் வைத்து நன்றாக உலர வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க கூடாது.
சேமிக்கும் எளிய வழிகள்
இஞ்சி பூண்டு விழுதை தயார்செய்ததும் அதனை கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் தான் சேமித்து வைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும் போது, வாசனையை ஈர்த்து கெட்டுப்போக காரணமாகும். விழுதை எடுக்க எப்போதும் உலர்ந்த ஸ்பூனை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஈரமான ஸ்பூன் பயன்படுத்தினால், விழுது விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு முறை சமையவுக்கு விழுது எடுத்த பின்னரும் போத்தலின் மூடியை காற்று புகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.
பேஸ்ட் தயாரித்த பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 1/2 தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெய் அல்லது வேர்க்கடலை எண்ணெயுடன், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து, மீண்டும் கலக்கி, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமிக்க வேண்டும். காரணம் உப்பு ஒரு இயற்கை பதப்படுத்தியாகவும், எண்ணெய் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

அதிக அளவில் விழுது தயாரித்தால், ஐஸ் ட்ரேக்களில் உறைய வைத்து, ஜிப்லாக் பைகளில் சேமிக்கலாம் இவ்வாறு சேமித்து வைக்கும் போது, 3 மாதங்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மேலும் மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால், விழுது கெடாமலும் அதன் நிறம் மற்றும் சுவை மாறாமல் இருக்கும். இந்த முறையில் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்து பாதுகாக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        