உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் நாடு எது?
தற்போது வளர்ந்து வரும் நவீன மயமாக்கினால் எந்தவொரு விடயம் இணையம் இல்லாமல் இயங்க முடியாத நிலை உருவாகி வருகிறது.
2025ஆம் ஆண்டில் உலகில் மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை வழங்கும் முதல் 10 நாடுகள் பற்றிய விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியா, உக்ரைன் நாடுகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், எந்த நாடு மிகக் குறைந்த விலையில் இணையச் சேவை தருகிறது என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். இந்தப் பட்டியலில் சீனா 10வது இடத்தில் இருக்கிறது. ஏனெனின் சீனர் ஒருவர் மாதத்திற்கு இணையம் சேவையை பெறுவதற்கு இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 978.24க்கு பெறுகிறார்.
பிராட்பேண்ட் இணைய சேவை சராசரியாக 240 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை சராசரியாக 139.58 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது.
இது போன்று மற்ற நாடுகளில் என்னென்ன விலையில் இணையச் சேவைகளை வழங்குகிறது. அதில், குறைவான விலையில் இணைய சேவையை வழங்கும் நாடு எது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
உக்ரைன் | குறைந்தச் செலவில் இணையச் சேவை வழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது உக்ரைன் தான். இந்த நாட்டில் ஒருவர் இணையச் சேவையை பெறுவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 520.30 செலவிடுகிறார். அதில் பிராட்பேண்ட் இணையச் சேவை 83.81 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 31.23 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது. |
ஈரான் | மிகக் குறைந்த விலையில், இணையச் சேவை வழங்கும் நாடுகளில் ஈரான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் மாதத்திற்கு இணையத்திற்காக இந்திய மதிப்பில் சுமாராக ரூ. 654.44 செலவிடப்படுகிறது. அதில் பிராட்பேண்ட் இணையச் சேவை 16.21 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 31.82 எம்பிபிஎஸ்-ஆகவும் கிடைக்கும். |
ரஷ்யா | இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. இந்த நாட்டில் வாழும் ஒருவர் இணையத்தை பெற்றுக் கொள்வதற்காக மாதத்திற்கு சுமாராக ரூ. 658.71 செலவிட வேண்டும். அதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 89.39 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 26.21 எம்பிபிஎஸ்-ஆகவும் கொடுக்கப்படுகிறது. |
இந்தியா | நான்காம் இடத்தில் இந்தியா தான் இருக்கிறது. இங்கு வாழும் ஒருவர் மாதத்திற்கு இணையத்திற்காக தோராயமாக ரூபாய் 689.46 செலவிடுகிறார். அதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 63.55 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 100.78 எம்பிபிஎஸ்-ஆகவும் கொடுக்கப்படுகிறது. |
வியட்நாம் | ஐந்தாவது இடத்தில் வியட்நாம் தான் இருக்கிறது. இங்கு வாழும் ஒருவர் ஒரு மாத இணையச் சேவையை பெற்றுக் கொள்ள இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 767.21க்கு பெறுகிறார். அதில், பிராட்பேண்ட் இணையச் சேவை 163.41 எம்பிபிஎஸ்-ஆகவும், மொபைல் இணையச் சேவை 134.19 எம்பிபிஎஸ்-ஆகவும் இருக்கிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |