2025ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய 10 தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ
2025-ம் ஆண்டு ரிலீஸ் செய்யபட்ட தமிழ் படங்களில் அதிக வசூல் அள்ளிய டாப் லிஸ்டில் இருக்கும் 10 திரைப்படங்கள்.
வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள்
2025 ம் அண்டு தமிழ் சினிமா திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் எதிர்பார்த்த படங்கள் எல்லாம் அவ்வளவு வசூலை கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் மதகஜராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் எல்லாம் எதிர்பாராமல் நல்ல வசூலை பெற்றிருந்தது. அந்த வகையில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளி இருக்கும் டாப் பத்து திரைப்பட லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1. அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களின் பட்டியலில் 10வது இடத்தில் சியான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் உள்ளது. இதை இயக்கியவர் அருண்குமார் ஆவார். பாக்ஸ் ஆபிஸில் ரூ.64 கோடி வசூலித்திருந்தது.
2. அடுத்து 9-வது இடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி உள்ளது. இது ஜூலை மாதம் திரைக்கு வந்து ரூ.84 கோடி வசூலித்திருக்கிறது.
3. அடுத்தது 8ம் இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இது ரூ.87 கோடி வசூலித்துள்ளது.
4. இந்த பட்டியலில் 7வது இடத்தை ரெட்ரோ திரைப்படம் தட்டி தூக்கி உள்ளது. இதை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.97 கோடி வசூலித்திருந்தது.
5. ஆறாவது இடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது. இது ரசிகர்கள் எதிர்பார்த்தளவில் வசூலை தரவில்லை. இப்படம் மொத்தமாகவே ரூ.97.25 கோடி வசூலித்து 6ம் இடத்தில் உள்ளது.
6. இதில் ஐந்தாம் இடத்தில் இருப்பது தனுஷின் நடிப்பில் வெளியான குபேரா தான். இப்படம் உலகளவில் 135.75 கோடி வசூலித்திருந்தது.
7. நான்காம் இடத்தை பிடித்த படம் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படமாகும். இதை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படம் ரூ.135.89 கோடி வசூலித்தது.
8. அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 151 கோடியை வசூலித்து சூன்றாம் இடத்தில் உள்ளது.
9. இரண்டாம் இடத்தில் இருக்கும் திரைப்படம் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி ஆகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.246 கோடி வசூலித்திருந்தது.
10. அடுத்த முதலாவதாக இருப்பது தான் கூலி. இதில் பல நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த இப்படம் நான்கு நாட்களிலேயே கிட்டத்தட்ட 400 கோடி வசூல் அள்ளி முதலிடத்தில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |