58 வயதிலும் Heavy Workout செய்யும் நடிகை நதியா! வைரலாகும் காணொளி
நடிகை நதியா 58 வயதாகியும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தீவிர உடற்பிற்ச்சியில் ஈடுப்பட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை நதியா
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா. இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நதியாவிற்கு கிடைத்தது. 90 காலப்பகுதியில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோருடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் பட்டியவில் இடம் பிடித்தார்.
நடிப்பையும் தாண்டி புது வகையான ஆடைகள், ஹேர் ஸ்டைல், கம்மல், போட்டு இளம் வயது பெண்களை இந்த காலப்பகுதியில் வெகுவாக ஈர்த்தார். நதியாவின் பெயரில் பல பொருட்களும் செம பிரபல்யம் ஆனது.
இந்த நிலையில், முன்னணி நடிகையாக இருக்கும் போதே, சிரீஸ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1988ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
அதன் பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.
பல மொழிகளில் நடித்து வந்தவர் திடீரென சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்பட சூப்பர் ஹிட் கொடுத்தது.
இந்நிலையில், தற்போது 58 வயதை எட்டியுள்ள நதியா தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருகிறார். அண்மையில் நதியா Heavy Workout காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |