குழந்தைகளை பாதிக்கும் தக்காளி வைரஸ்! தக்காளியில் இருந்து பரவுமா?
கேரளாவில் பரவும் புதுவகை தக்காளி காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தக்காளி வைரஸ்:
கேரளாவில் புதிய வகை தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. அதில், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காய்ச்சலால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படுவதுடன், உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகம் மற்றும் உள்ளங்கைகளில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல், வலியை தரும் பாதிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க! பாரிய பக்கவிளைவு ஏற்படுமாம்
தமிழகத்தில் பாதிப்பு..?
கொல்லம் தொடர்ந்து ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர், தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும்இல்லை என்றும் இது ஒருவகையான காய்ச்சல்தான் என்றும் கூறியுள்ளார்.
இதனால் பெரிய பாதிப்பு இல்லை எனவும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வருவதால் தக்காளி வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் யாரும் அச்சம் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.