மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க! பாரிய பக்கவிளைவு ஏற்படுமாம்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை சுவைக்க விரும்பாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இதில் எண்ணற்ற சத்துக்களுடன் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் இருப்பதால், நீண்டநேரத்திற்கு பசி உணர்வு இருக்காது.
எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தங்கள் டயட்டில் எவ்வித தயக்கமுமின்றி சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வைட்டமின் சியைத் தவிர, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பிற சத்துகளும் நிறைந்துள்ளன.
இந்நிலையில், மாம்பழம் சாப்பிடும் போது செய்யக் கூடாதவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம். மாம்பழத்தை ருசித்த பிறகுஇந்த 5 பொருட்களை சாப்பிடக் கூடாது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தொடையழகைக் காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்
தண்ணீர்
கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைய சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு இதை செய்யாதீர்கள். இதனால் வயிற்று வலி ஏற்படும். குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தயிர்
கோடையில் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தயிர் சாப்பிடுவது நல்லது என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தயிரைத் தொடாதீர்கள். ஏனெனில் இது சளி மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க
பாகற்காய்
பாகற்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஆனால் மாம்பழத்தை உட்கொண்ட உடனேயே அதை சாப்பிடக்கூடாது. இதனால் வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மசாலா
கோடையில் மாம்பழத்தைச் சுவைக்க வேண்டும், ஆனால் இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு, அதிக மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இதனால் தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
திருமணத்தில் அயர்ந்து தூங்கிய மணப்பெண்! வைரலாகும் காட்சி
குளிர் பானங்கள்
குளிர் பானங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, அத்தகைய பானத்தை குடிக்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கிறது. இதைத் அடிக்கடி செய்வதால், சர்க்கரை நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.