ஐஸ்வர்யாவின் பேராசையால் மற்றுமொரு சிக்கலில் சிக்கிய கண்ணன்! விறுவிறுப்பாக நகரும் கதைக்களம்
கிரெடிட் கார்ட் விடயத்தில் தப்பித்த கண்ணன் இன்னொரு சிக்கலில் வசமாக சிக்கியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தார் என நான்கு சகோதரர்களும் அவர்களின் வாழ்க்கை எப்படி செய்கின்றது என்பதனையும் இந்த சீரியல் எடுத்து கூறுகின்றது.
தற்போது சகோதரர்கள் நான்கு பேரும் நான்கு திசையில் இருக்கிறார்கள்.
மற்றுமொரு பிரச்சினையில் சிக்கிய கண்ணன்
இந்த நிலையில் கண்ணன் - ஐஸ்வர்யா தன்னுடைய பேராசையால் ஏகப்பட்ட கடன்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு கடன்காரர்களாக கண்ணனின் வீட்டு முற்றத்திற்கு வந்து தங்களின் பணத்தை கேட்டு வருகிறார்கள்.
மேலும் கிரடிட் கார்ட் விடயத்தில் தப்பித்த கண்ணன் மற்றுமொரு பிரச்சினையில் வசமாக சிக்கியுள்ளார்.
இப்போது கடன்காரரர் வீட்டிற்கு வெளியில் இல்லை வீட்டினுள் இருக்கும் ஐஸ்வர்யாவின் சித்தி. இதற்கு கண்ணன் என்ன பதில் கூற போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.