கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இந்த 7 தவறை செய்திடாதீங்க
credit card
credit card mistake
By Manchu
இன்று கடன் இல்லாமல் வாழ்ந்து வரும் மக்களும் கிரெடிட் கார்டு என்பதை பயன்படுத்தி வாழ்க்கையில் சில கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் எந்தெந்த தவறினை செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
- நமது கிரெடிட் கார்டு விபரங்களை வெளியே கூறினால் அதனை பயன்படுத்த நீங்கள் தகுதியானர் இல்லை என்பது அர்த்தம். நம்மில் பலர் தெரிந்தோ, தெரியாமலோ கிரெடிட் கார்டு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர் . மற்ற கார்டு விவரங்களைப் போல, இந்த கார்டு விவரங்களையும் பாதுகாப்பதும் அவசியம்.
- பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரன்ட்டுகள் போன்ற பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதுதான், அது சார்ந்த விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. ஆதலால் இந்த இடங்களில் பயன்படுத்தும் சற்று ஜாக்கிரதையாக நீங்கள் இருக்க வேண்டும்.
- நாம் கிரெடிட் கார்டு மூலம் வைத்திருக்கும் கடனை அவர்கள் கொடுத்திருக்கும் கால அவகாசத்திற்குள் கட்ட வேண்டும். அப்படியில்லாமல், தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப் போட்டால் நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சரியாக இல்லை எனக்கொள்ளலாம்.
- நீங்கள் உங்களுடைய அவசரத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கிறீர்கள் எனில், நீங்கள் இதைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஆள் கிடையாது. இவ்வாறு வாங்கும் பணத்திற்கு பல வங்கிகள் அதிகமான வட்டி விகிதத்தினை கட்டுவதற்கு நிர்ணயம் செய்துள்ளது.
- உங்களுக்குக் கொடுக்கப்பட்டிக்கும் கிரெடிட் லிமிட் முழுவதையும் பயன்படுத்துபவராக இருந்தால், இனிமேல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாதீர்கள்.
- கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ரிவார்டு பாயின்ட்டுகளை வழங்குவது வங்கிகளின் வழக்கமான செயல். அந்த ரிவார்டு பாயின்டுகளைப் பெறுவதற்காகவே நம்மில் பலர் அதைப் பயன்படுத்திவருகிறோம். இவ்வாறு அவர்கள் கொடுக்கும் ரிவார்டுக்கு நீங்கள் ஷாப்பிங் செய்தால், நீங்களே பாதிக்கப்படுவீர்கள்.
- சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து, பிறகு கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்த தெரிந்தவராக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டாம்.
- கிரெடிட் கார்டுகளைப் பொருத்தவரை சரியான தவணைத் தேதியில் தவணையை செலுத்த முடியாமல் போனால், அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வட்டியைக் கட்ட முடியாமல் அதற்காகவே வெளியில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு தகுதியானவர் இல்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US