5 வருடங்களாக குழந்தையில்லை! கண்கலங்கிய படி நீயா நானாவில் சொந்த சகோதரி மேல் வைத்த குற்றச்சாட்டு
எனக்கு குழந்தை இல்லை என்பதனை என்னுடைய அக்கா சில வார்த்தைகளால் குற்றி காட்டுவார் என நீயா நானாவில் பெண்ணொருவர் கண்கலங்கியுள்ளார்.
நீயா நானாவில் சிறப்பு விவாதம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் இந்த நீயா நானா.
இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
தங்கை குற்றி காட்டி பேசும் அக்கா
இந்த நிலையில், மாறுப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்த அக்கா - தங்கைகளின் சில சோகமான அனுபவக்கதைகள் தான் இந்த வாரம் நீயாநானாவில் பேசப்படுகின்றது.
இதில், “என்னுடைய அக்காவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நாள் கோல் செய்யவில்லையென்றால் ஏன்? என கேட்பேன்.
அதற்கு நான் இரண்டு குழந்தைகளை வைத்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். ”என கூறுவார். இந்த விடயம் எனக்கு குழந்தையில்லை என்பதனை குற்றி காட்டுவது போல் இருக்கும்.
மேலும் அதற்கு அக்கா“நான் இந்த மாதிரியான அர்த்தத்தில் சொல்லவில்லை.” என சமாதானம் பேசியுள்ளார்.
இதனை ஒப்பு கொள்ளாத கோபிநாத்,“எப்படி நீங்கள் சொன்னாலும் தவறு தவறு தானே ...” என தவறை புரிய வைத்துள்ளார்.