நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்? இளம்பெண்ணிடம் கொந்தளித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் வார இறுதி கொண்டாட்டத்திற்கு தயாராகும் மனைவிகள் மற்றும் அதற்கு நோ சொல்லும் கணவர் என்ற தலைப்பில் விவாதங்கள் தொடர்ந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வார இறுதி கொண்டாட்டத்திற்கு தயாராகும் மனைவிகள் மற்றும் அதற்கு நோ சொல்லும் கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருக்கும் மனைவிகள் கணவருடன் வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்றே. ஆனால் அதனை திருமணத்திற்கு முன்பு செய்யும் ஆண்கள் திருமணத்திற்கு பின்பு செய்ய தயங்குகின்றனர்.
இதற்கு காரணத்தையும் நீயா நானாவில் பல கணவர்கள் கோபிநாத் முன்பு உடைத்துள்ளனர். ஆனால் பெண்கள் மிகவும் வித்தியாசம் என்ற பெயரில் பேய் பயத்தை காட்டியுள்ளனர்.
இதற்கு கோபிநாத் நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும் என்று கேள்வி எழுப்பி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார்.