மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்றி கொடுத்த ஜிபி முத்து! சாந்தி மாஸ்டரை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் கூட்டணி படையெடுத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சிசன் 6 ஆரம்பத்து தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த சீசனில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் படி சுமார் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் முதல் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்கள்.
ஜிபி முத்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிகுள்
மேலும் ஜிபி முத்து வீட்டில் இருக்கும் போது காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்தளவு சந்தோசமாக சக போட்டியாளர்களை வைத்துக்கொண்டார்.
இவர் வெளியேறிய பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 இறுதிகட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்களை வரவழைத்து பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
நேற்றைய தினம் பார்வதி வருகை தந்து போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
வெளியேறிய போட்டியாளர்கள்
இன்றைய தினம் ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, ஜிபி முத்து , சாந்தி மாஸ்டர் ஆகியோர் வருகை தந்து பிக் பாஸ் வீட்டை குதூகலமாக மாற்றியுள்ளனர்.
மேலும் பிக் பாஸ் ஜிபிமுத்துவை இனி வெளியில் அனுப்ப போவதில்லை என கலாய்த்துள்ளார். இதற்கு பரவயில்லை நா இங்க இருக்கேன் என்று சந்தோசமாக கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.