பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராகிய ஜிபி. முத்து! பதவி வேண்டாம் என கூறியதால் அதிர்ச்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடத்தப்பட்ட தலைவர் போட்டியில் ஜிபி முத்து வெற்றி பெற்று சீசன் 6ன் பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராகியுள்ளார்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 10 பெண் போடியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். பின்பு மைனா நந்தினி 21வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களில் சண்டையும் ஆரம்பித்துள்ளன.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான். அவருக்கென ஆர்மி தொடங்கி, டுவிட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
வீட்டின் தலைவராகிய ஜிபி முத்து
இந்நிலையில் இன்று நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், வீட்டின் தலைவர் பதவிக்கு சாந்தி, ஜனனி, ஜி.பி.முத்து கலந்து கொண்டுள்ளனர்.
இதில் சாந்தி முதலில் அவுட் ஆகி வெளியே வந்த நிலையில், மற்ற இருவரும் போட்டியில் தொடர்ந்து காணப்பட்டனர்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ஜி.பி.முத்து பிக்பாஸ் தலைவராகியுள்ள நிலையில், வீட்டின் அனைத்து போட்டியாளர்களும் அவரை தொந்தரவு செய்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.