ஜிபி முத்துவை அழ வைத்த பிரபலம்! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்றைய தினம் முன்னாள் போட்டியாளராக வருகை தந்த சரவணன், ஜிபி முத்துவை கண்கலங்க வைத்துள்ளார்.
இறுதிக்காலக்கட்டத்தில் பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 தற்போது இறுதி காலக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சீசனில் மொத்தமாக 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். அதில் சுமார் 15 போட்டியாளர்கள் தற்போது வரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கடைசி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் அணைவரும் ஏடிகே தவிர வீட்டில் தான் இருக்கிறார்கள்.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற கடைசி நாமினேஷனில் அமுதவாணனைத் தவிர அசீம், விக்ரமன்,கதிர், ஷிவின், மைனா, ஏடிகே ஆகியோர் எவிக்ஷனுக்கு சென்றார்கள். இதிலும் அசீம் தான் முதல் முறையாக சேவ்வானார். இதனை தொடர்ந்து ஏடிகே பகிரங்கமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு விருந்தினர் வருகை
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் வீட்டின் முன்னாள் போட்டியாளரான நடிகர் சரவணன் வருகை தந்துள்ளார்.
இவர் வருகையை போட்டியாளர்கள் கொண்டாடியுள்ளார்கள். மேலும் கோலகமாக வரவேற்றுள்ளார்கள்.
இதன்போது பிக் பாஸ் வீட்டில் எதிலும் பங்கேற்காமல் எப்படி கதிர் மட்டும் இருக்கிறார் என போட்டியாளர்கள் ஒன்றுக்கூடி கலாய்த்துள்ளார்கள்.
இதனையடுத்து சரவணன் நடிக்கும் சீரியலின் ப்ரோமோ போடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜிபி முத்து உட்பட அணைவரும் கண்கலங்கியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.