டாஸ்க்கின் மூலம் ஒன்று சேர்ந்த பிரபலங்கள்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிவின்..
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமா ர் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதன்படி, நேற்றைய தினம் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சிவினை கலாய்த்த பிரபலம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சிவின், கதிரவனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் சிவின் இது குறித்து பல இடங்களில் பாவணைகள் மூலமே பதிலளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இருவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது இருவரும் டாஸ்க்கில் வெற்றிப் பெற்றவுடன் இருவரும் கைக் கொடுக்க சென்ற போது கதிரவன் தன்னுடைய கைகளை கூப்பியப்படி நன்றி தெரிவித்து சென்றுள்ளார்.
இதனால் சிவின் அவமானத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்து சமாளித்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.