கதிர்-ஷிவின் காதல்: சீக்ரெட்டை உடைத்த அசீம்!
கதிர்-ஷிவின் காதல் குறித்து அசீம் சீக்ரட் ரூமில் பேசிய விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தற்போது 80 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டு குறைவான வாக்குகளின் அடிப்படையில் 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது 8 போட்டியாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இதன்படி, நேற்று முன்தினம் மணிகண்டன் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோமினேஷன்
மணிகண்டன் வெளியேற்றப்பட்டதுடன் இந்த வாரம் நோமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய உத்தியை கையாண்டு வருகின்றார் பிக்பாஸ்.
அந்தவகையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி மக்களை எப்படி எல்லாம் சுவாரஸ்யப்படுத்தினார்கள் என்பது குறித்து பேச வேண்டும்.
அதன் அடிப்படையில், ஒரு நபர் நோமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
கதிர்-ஷிவின் காதல்
பல டாஸ்க்குகள் குறித்து பேசி முடித்து விட்டு கதிர்-ஷிவின் காதல் பற்றி அசீம் பேசியிருக்கிறார். அதில் "திடீர்னு ஷிவினோட பொருள் ஏதாவது கதிரை எடுக்க சொல்லிட்டு அதை வச்சு விளையாடுறது.
ஏதாவது பெருசா குழப்பம் வருதுன்னா அதோட முக்கியமான அடையாளமா நான் பல நேரம் திகழ்ந்து இருக்கேன். முக்கியமா அது ஷிவின், கதிருக்கு நடுவில் இருக்கிற அந்த Fun ஆன லவ் ட்ராக் அப்படிங்கிறத நாங்களே கொளுத்தி போட்டு விடுவோம்.
இங்க பாரு, கதிர் இப்படியெல்லாம் சொன்னான் அப்படின்னு ஷிவின்கிட்ட `சொல்லிட்டு நாங்களே ஒண்ண கொளுத்தி போட்டு விடுவோம். அது எல்லாமே நானும் மைனாவும் பேசி வச்சு பண்ணுவோம்.
ஷிவின் புடிச்சு கலாய் கலாய்னு கலாய்ப்போம். கடைசில தான் உண்மையை சொல்லுவோம் " என அசீம் பேசியிருப்பார்.
மேலும், Freeze டாஸ்க்கின் போது கதிரவனின் குடும்பத்தார் மற்றும் கதிரின் கேர்ள் ப்ரண்ட் வந்திருந்த போது ஷிவின் சற்று கவலையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.