ஜனனிக்கு ஆதரவாக அமுதவாணன்! சண்டையிட்ட மைனா- பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடையிலான சண்டைகள் மறுபடியும் சூடுபிடித்துள்ளது.
டபுள் எவிக்ஸன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ராம் மற்றும் ஆயிஷா இருவர் வெளியேற்றப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் சீசன் 6 ல் 10வது வாரத்திற்கான டாஸ்க் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வாக்குவாதம் செய்யாத நபர்கள் சொர்க்கத்து ஏஞ்சலாக மாறியுள்ளனர்.
வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிடும் நபர்கள் நரகத்தில் காணப்படுகின்றனர்.
சூடுபிடிக்கும் சண்டைகள்
இந்நிலையில் அமுதவாணன் ஜனனிக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாக மைனா நந்தனி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும் அமுதவாணன் “நான் அப்படி தான் இருப்பேன் எனவும் எனக்கிட்ட இப்படியெல்லாம் பேசாதனு” திமிராக பதிலளித்துள்ளார். இவரின் பதிலை பார்த்து மைனா, “அப்படியென்றால் இங்கிருந்து போ” என கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.