சரிகமப லிட்டில் சாம்ஸ் - இல் மெய்சிலிர்க்க பாடி அரங்கத்தை தெறிக்கவிட்ட போட்டியாளர்
சரிகமப நிகழ்ச்சியில் அபிஷா எனும் போட்டியாளர் கருப்புசாமி பாடலை சிறப்பாக பாடி அரங்கத்தில் இருந்தவர்களை வாயை பிளக்க வைத்துள்ளார்.
சரிகமப நிகழ்ச்சி
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக 25 திறமைமிக்க போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அறிமுகச் சுற்று நல்லபடியாக கடந்த வாரங்களில் நடந்து முடிந்தது.

ஒவ்வொரு குழந்தைகளும் குழந்தைகளா இப்படி பாடுகிறார்கள் என ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அபிஷா எனம் போட்டியாளர் கருப்புசாமி பாடலை மிகவும் சிறப்பாக பாடி உள்ளார்.
அவர் பாடும் போது இருக்கும் உற்சாகத்தை பார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கரகோஷம் தெரிவித்தனர்.
நடுவர்கள் இந்த பெர்போமன்ஸ்க்கு வெறும் கோல்டன் கொடுத்தா பத்தாது பிளாட்டினம் கொடுக்க வேண்டும் என கூறினார்கள். இதற்கான குறுகிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |