Vellakari kulambu: எந்த மசாலாவும் இல்லையா? அப்போ வெள்ளக்கறி குழம்பு வச்சு பாருங்க.. சுவை அள்ளும்
திருநெல்வேலி சீமையில் சொதி குழம்பு பிரபலமாக உள்ளன.
எந்த தான் காரசாரமாக குழம்பு வைத்தாலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் சமைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம்.
அப்படியொரு குழம்பு தான் வெள்ளக்கறி குழம்பு. திருநெல்வேலியில் செய்யப்படும் சைவ குழம்புகளில் ஒரு வகையாகும். அதில் எந்த பொடியும் கிடையாது, பருப்பும் கிடையாது.
அந்த வகையில், வெள்ளக்குழம்பு எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி கரைச்சல்
- கத்தரிக்காய்
- மாங்காய்
- முருங்கைக்காய்
- மிளகாய்
- வத்தல்
- தேங்காய்
- சீரகம்
- நிறைய சின்ன வெங்காயம்
- வெள்ளப்பூண்டு- 5 பல்
செய்முறை
வெள்ளகுழம்பு செய்ய முதலில் புளி கரைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் கத்தரிக்காய், மாங்காய், முருங்கைக்காய் இவை தான் இந்த குழம்பில் போடப்படும் காய்கறிகளாகும். மற்ற நாட்டு காய்கறியும் இதில் போடலாம்.
பொரியலுக்கு அவியலுக்கு நீளவாக்கில் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வத்தல், தேங்காய், சீரகம், நிறைய சின்ன வெங்காயம் கூடவே 5 பல் வெள்ளப்பூண்டு அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் லேசாக விட்டுவிட்டு தான் அரைக்க வேண்டும். அம்மியில் அரைத்து செய்தால் ருசி அதிகமாக இருக்கும். புளித் தண்ணீரில் காய்கறிகளை வேக வைத்து, அரைத்த கலவையை போட்டு அதில் கலந்து கொள்ளவும்.
அடுத்து, மஞ்சப்பொடி, உப்பு போட்டு ஸ்லோ ஃப்ளேமில் வைத்து சமைக்கவும். குழம்பு பொடி தயாரானதும் வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு வெந்தயம் தாளித்து கருவேப்பிலையை போட்டு குழம்பில் கொட்டி விடலாம்.
இந்தக் குழம்பு மணம் நன்றாக இருப்பதால் வெள்ளகுழம்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஏதாவது பொறியலுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை நன்றாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |