உதட்டை சிகப்பாகவும் கவர்ச்சியாகவும் மாற்ற வேண்டுமா? தேனுடன் இதை சேர்த்து தடவினால் போதுமாம்
பொதுவாக சிலருக்கு பரம்பரை காரணமாகவும் மற்றும் இரசாயன பொருட்கள் பயன்பாடு காரணமாகவும் உதடு கருப்பாக காணப்படும்.
இப்படி இருந்தால் முகம் பொலிவற்று காணப்படும் என நினைத்து அதனை சிவப்பாக மாற்ற வேண்டும் என பல முயற்சிகள் எடுப்பார்கள்.
இது போன்று கருப்பாக வரண்டு போய் இருக்கும் உதட்டை வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு நிரந்தரமாக கருமையை இல்லாமாக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், வீட்டிலும் அல்லது மலிகை கடைகளில் மலிவாக கிடைக்கும் தேன், பற்பசை, பிட்ரூட் என்பவை உதட்டை சிகப்பாக மாற்றலாம். இது தொடர்பாக தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
1. தேவையான பொருட்கள்
1. சர்க்கரை- 2 டீஸ்பூன்
2. தேன்- 1 தேக்கரண்டி
3. பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
மூன்றையும் ஒன்றாக கலந்து உதட்டின் மேல் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்.
2.தேவையான பொருட்கள்
1. பற்பசை - ஒரு கடலை அளவு
2. தேன் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
இரண்டு பொருட்களை சரியானளவு சேர்த்து உதட்டில் தேய்த்து கழுவினால் தேனிலிருக்கும் சில பதார்த்தம் கருமையை இல்லாமாக்கி மென்மை கொடுத்து சிகப்பாக மாற்றும்.