பற்பசை பயன்படுத்தும் நாம் இவைகளை அறிந்திருக்கின்றோமா?
1. பற்களின் வேர்களைப் பாதுகாப்பதற்கு இயற்கையான உப்பினை முதன்மைப் படுத்துவோம். 2. இலங்கையில் 47 சதவீதமான பிள்ளைகளுக்கு பற்களின் வேர்களில் நோய்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்ட விடயத்தைக் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
( தேசிய வாய் சுகாதார ஆய்வறிக்கை 2015/16) இந்த புள்ளிவிபரப்படி உங்கள் குழந்தைகளும் இதில் அடங்கவில்லை என்பதில் என்ன நிச்சயம்? 3. மரத்திற்கு வேர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பற்களுக்கும் வேர்களே மிகவும் முக்கியம். மரத்தின் வேர்கள் காரணமாகவே அது மண்ணுடன் இரண்டறக் கலந்திருக்கும். வேர் சிதைந்து போனால் மரம் எந்த நேரத்திலும் சரிந்து போகலாம்.
பற்களின் பொற்காலமும் இதே நிலைதான். பற்களின் வேர்களைப் பாதுகாப்பதில், தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இயற்கை மூலிகைககளில் உப்பு முன்னிலை வகிக்கிறது. 4. பற்களின் வேர் மற்றும் ஈறுகளை பலப்படுத்துவது எவ்வளவு முக்கியமானது தெ ரியமா? 5. ஆரோக்கியமிக்க பற்களின் வேர் ! கறைபடிந்த பற்களின் வேர் ! தொற்றுக்குள்ளான பல் ஈறுகள் !
6. உங்கள் வாயில் அதிகம் கவனத்திற் கொள்ளப்படாத - ஆனால், மிகவும் முக்கியமான பகுதியே இந்த பல் ஈறுகளாகும். பற்களையும் பற்களின் வேர்களையும் இணைக்கும் இளஞ்சிவப்பு நிறத்தினாலான தசைப் படையே பல் ஈறுகள் எனப்படுகின்றன.
இதனூடாகவே பற்கள் மற்றும் எலும்புகள் இணைந்து பற்கள் உறுதிமிக்கனவாகின்றன. அதிகமானவர்கள் நாளொன்றுக்கு இரு தடவைகள் பல் துலக்குவதன் மூலம் பற் சிதைவினை தடுக்க கையாளும் சிரத்தையைப் போலவே, பல் ஈறுகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
7. பற்கள் மற்றும் பல் ஈறுகளுக்கிடையில் படியும் மெல்லிய படையில் ஏற்படும் பக்டீரியாக்களினால் பல் ஈறுகள் தொற்றுக்கு உள்ளாகின்றன. 8. இலங்கையில் 15 வயதிற்கு குறைந்த 47 சதவீதமான பிள்ளைகள் பல் ஈறுகள் காரணமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய வாய் சுகாதார ஆய்வறிக்கை 2015/16 சுட்டிக்காட்டியுள்ளது. 9. முழுக் குடும்பத்தினரதும் பற்களின் வேர்களையும் பல் ஈறுகளையும் பாதுகாப்பது மிக முக்கியமானது.
10. இலங்கையர்களான நாம் - பற்களின் வேர்கள் மற்றும் பல் ஈறுகளை பாதுகாத்துக் கொள்வதற்காக கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வதில்லை. பற்களின் சுகாதாரத்தை உரியபடி பேணாமையினால் வாழ்க்கையில் நாம் எத்தனை பிரச்சினைகள், தொல்லைகளுக்கு உள்ளாகின்றோம். 11. அதேபோன்று - பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் அபாயகரமானவை. பல் ஈறுகளின் பிரச்சினையினால் பல் வலி மற்றும் பற்கள் விழுதலுக்கு மேலதிகமாக வாய்த் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
எதிர்பாராத வகையில் பற்கள் விழுந்து போவதால் முகப் பொலிவே மங்கிப் போய் இளமைத் தோற்றமே இல்லாமல் போகலாம். உங்கள் சமையலறையில் காணப்படும் ஒரு சிறிதளவு உப்பின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். 12. பற்களின் வேர்கள் மற்றும் பல் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உப்பு எவ்வாறு பயன்படுகிறது?
13. எமது மூதாதையர்கள் பற்கள், பற்களின் ஈறுகள் மற்றும் பற்களின் வேர்களை பாதுகாக்கும் நோக்கில், உப்பை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எப்போதும் உப்பு கலந்த சுடு நீரில் வாயைக் கழுவினர்.
14. உப்பு, வாயின் பீ.எச்.(P.H) பெறுமான சமனிலையை அதிகரிக்கக் கூடியது. இதனால் வாயில் பக்டீரியா வளர்வது தடைப்பட்டு பல் ஈறுகள் மற்றும் பற்கள் பாதுகாக்கப்படும். 15. தொண்டையில் வலி ஏற்பட்டால் மிதமான வெப்பத்துடனான நீரில் உப்பைக் கரைத்து தொண்டையைக் கழுவுவதனால் விரைவில் வலி நீங்கும்.
அதேபோன்று பல் ஈறுகளின் தொற்றுக்களினால் ஏற்படக்கூடிய வலிக்கும் இதுவே மிகச் சிறந்த நிவாரணியாகும். 16. இயற்கையான உப்பு அடங்கிய நம் நாட்டின் பற்பசை. க்ளோகாட் - " நெச்சுரல் சோல்ட் " பற்பசையானது பற்கள் மற்றும் பல் ஈறுகள் குறித்த நோய்களுக்கு நல்ல தீர்வாகும். பொதுவாக பல் துலக்கும் போது இதில் இயற்கையான உப்பு காணப்படுவதனால் அதன் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கிறது.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பற்கள், பற்களின் ஈறுகள் மற்றும் பற்களின் வேர்கள் என்பனவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இன்றே க்ளோகாட் " நெச்சுரல் சோல்ட்" (Clogard Natural Salt) பற்பசையை பயன்படுத்திப் பாருங்கள்.
நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் பல் துலக்குவதே சிறந்தது என்பது வைத்தியர்களின் அறிவுரையாகும்.