சர்க்கரை நோயையும் அலறவிடும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை! பத்தே நிமிடத்தில் தயார்... எப்படி தெரியுமா?
பொதுவாக கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால் வெயிட் போடும், வாயுத் தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அவற்றை ஒதுக்கிவிடுவோம்.
ஆனால், எக்கச்சக்கமான மருத்துவ குணங்களைத் தந்து, இயற்கையாய் உடல் முழுவதையும் சுத்தம் செய்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு.
வாய் முதல் ஆசனவாய் வரையுள்ள உறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே போனதாக அர்த்தம் இல்லை. உடலைப் பராமரித்துக் கொள்ளத் தொடங்கும் தருணம் அது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்.
உடலுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இதை சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று சொல்வதை விட சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்றுதான் சொல்ல வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம்.
அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - அரை கப் சர்க்கரை
- வள்ளிக்கிழங்கு -1 பச்சை
- மிளகாய் - 1 (நறுக்கவும்)
- இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
- கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
- சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.
அரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். அதைத்தொடர்ந்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
இதனை சூரணமாக வைத்துக்கொள்ளவும்.
சிறிதளவு பிசைந்து வைத்த அரிசி மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் சூரணத்தை வைத்து விரும்பிய வடிவில் கொழுக்கட்டையாக்கி, வேகவைத்து சாப்பிடவும்.