புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலப்பு! வெளிநாட்டு சந்தையிலிருந்து அவசர அவசரமாக திரும்பப்பெறப்படும் shampoo
சில வகை சாம்போக்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யுனிலீவர் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களை அவர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர்.
அந்த நிறுவனம் தயாரித்த சாம்போக்களில் பென்சின் என்ற இரசாயன வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளதாம்.
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலப்பு!
பென்சீன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படும் என்று அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட Dove , Nexuss ,Sueve , Tressme, Trigi போன்றவற்றை சந்தையில் இருந்து நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே Pantene போன்ற பிரபலமான சாம்போக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வாங்கியவர்கள் எச்சரிக்கையாக பயன்படுத்தவும்.