சுருக்கம் இல்லாமல் துணிகள் புதிது போல் இருக்க வேண்டுமா? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!
பொதுவாக நாம் பயன்படுத்தும் ஆடையில் தான் எம்மை மற்றவர்கள் கணக்கீடுவார்கள்.
அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கும் அடிப்படை தேவைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் ஆடை. இன்றைய சூழலில் ஆடைகளை அணிந்து விட்டு அதனை சலவை செய்து போடுபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
அதற்கு சில நுட்பங்கள் இருக்கின்றது. ஆடைகள் வாங்கி வெகு நாட்கள் ஆனாலும் அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் ஆயுட்காலம் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து ஆடைகளை எப்படி புதிது போல் வைத்து கொள்வது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தினமும் அயர்னிங் செய்பவர்களா?
1. தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்
பொதுவாக ஆடைகளில் சலவை செய்து காய விட்டு எடுக்கும் போது அதில் நிறைய சுருக்கங்கள் இருக்கும். இதனால் அந்த ஆடைகளை இஸ்திரி செய்யாமல் அணிய முடியாது. இதனால் அயன் செய்யும் போது தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் இலகுவாக இஸ்திரி செய்து கொள்ளலாம். வெளியில் செல்லும் போது ஒரு சிறு சுருக்கம் இருக்காது.
2. ஹேர் ட்ரையரை பயன்படுத்துங்கள்
அலுவலங்களுக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் ஆடைகளை கழுவி இஸ்திரி போட்டு அலுமாரிகளில் அடுக்கி வைத்து விடுவார்கள். அப்போது ஆடைகளில் எப்போதும் ஒரு சுருக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
அப்போது வெளியில் எடுத்து ஒரு இடத்தில் மாட்டி விட்டு அதற்கு மேல் சிறிதளவு தண்ணீர் எடுத்து தெளித்து விட்டு ஹேர் ட்ரையரை பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆடைகளில் இருக்கும் சுருக்கம் மறைந்து புதிது போல் காட்சி கொடுக்கும்.
3. ஆடைகளை ஹேங்கர்களில் தொங்க விடல்
நிறைய துணிகளில் கழுவும் போது சில ஆடைகளை ஹேங்கர்களில் போட வேண்டிய நிலை இருக்கும். இவ்வாறு தொங்க விடும் போது அந்த ஆடைகளில் பெரிதளவில் சுருக்கம் இருக்காது. சுருக்கம் காய வைக்கும் போதே இல்லாததால் அதனை பெரியதாக அயர்னிங் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
4. செய்தி தாள்கள் பயன்பாடு
சில ஆடைகளில் எவ்வளவு அயர்னிங் செய்தாலும் சுருக்கம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் ஆடைகளுக்கு இடையில் ஒரு செய்தி தாளை வைத்து அயர்னிங் செய்தால் சுருக்கம் இல்லாமல் அயர்னிங் செய்யலாம்.
5. அளவுக்களுகேற்ப ஆடைகளை தெரிவு செய்தல்
ஆடைகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் துணிகளுக்கேற்ப அதன் அயர்னிங் செய்யும் நேரம், தன்மை மாறுப்படும். லேசாக இருக்கும் துணிகளில் உள்ள ஆடைகளை குறைவான அளவு வெப்பம் வைத்து ஆடைகளை அயர்னிங் செய்ய வேண்டும். பின்னர் கடினமாக இருக்கும் துணிகளில் உள்ள ஆடைகளை அழுத்த வேண்டும்.