இலங்கை ஜனாதிபதி வீட்டின் அலுமாரியில் ஆடப்பர ரகசிய அறை - மூட்டை கணக்கில் கிடக்கும் பணம்!
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் பதுங்கு குழிகளை கண்டுப்பிடித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் தங்கியுள்ளனர்.
அங்கு ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம், பதுங்கு குழிகளை கண்டுப்பிடித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள இரகசிய பாதைகளை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளதுடன், போர்க்காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் அவசரநிலைக்கு பயன்படுத்திய நிலத்தடி வீடொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.