தைராய்டு பிரச்சினை இருக்கிறதா... இனி நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்
எமது உடலில் இருக்கும் பலவகையான சுரப்பிகளில் உள்ளன. அதில் தொண்டைப் பகுதியில் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து இரண்டு சிறகுகள் போல அமைந்திருப்பது தான் தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது.
இதன் எடை 12 லிருந்து 20 கிராம்வரை தான் இருக்கும். இந்த தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை என்பவற்றுக்கு காரணமாக இருக்கின்றது.
தைரோய்டு பிரச்சினை அயோடின் சத்துக் குறைப்பாடு காரணமானமாகவும், பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது போன்ற பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
அதனால் இந்த தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவையாவன
சாப்பிட வேண்டியவை
பால் பொருட்களில் அதிக ஆரோக்கிய கொழுப்புகள், கால்சியம் மற்றும் ஐயோடிகள்கள் அதிகம் இருக்கிறது. அதனால் தைரோய்டு இருப்பவர்கள் சீஸ் மற்றும் மொஸரெல்லா என்பவற்றை உண்ணலாம்.
தைராய்டு இருப்பவர்கள் பால் அதிகம் குடிக்கலாம் எனெனில் பசுக்களுக்கு கொடுக்கும் தீவனம் மற்றும் புல்லில் ஐயோடின் நிறைந்ததாக கொடுக்கும் போது தீவனங்களில் இருக்கும் ஐயோடின் பாலுக்கு மாற்றப்படுகிறது.
நீங்கள் உண்ணும் உணவில் அதிக ஐயோடின் நிறைந்த உணவாக டுனா மீனை சேர்த்துக் கொள்ளலாம்.
டுனா மீனைப் போல மத்தி என்ற மீன் வகையிலும் குறைந்த கலோரிகள் மற்றும் ஐயோடிகன்கள் அதிகம் இருக்கிறது. இந்த மீனை வேகவைத்து அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
ஒரு முட்டையில் 24 மைக்ரோகிராம் ஐயோடின் உள்ளது. அதனால் தைராய்ட் பிரச்சினை இருப்பவர்கள் தினமும் 1 முட்டை சாப்பிட்டால் நல்லது.
இறால் மற்றும் ஏனைய கடல் உணவுகளில் கடல் நீரில் இருக்கும் ஐயோடினை உறிஞ்சசுவதால் அவை ஐயோடின் அதிகம் நிறைந்த உணவாக மாறுகிறது அதனால் தைராய்டு இருப்பவர் இறாலும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |