தைராய்டு நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்? நன்மை தீமைகள்;
எந்த வகையான இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணக்கூடிய பழம் என்றால் அதில் ஒன்று தான் பலாப்பழம். பலாப்பழத்தில் எண்ணற்ற புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
இதில், ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்கள் உள்ளன. பலாப்பழம் மலச்சிக்கலை குணப்படுத்தும் என்பதால் பழக்கமில்லாமல் அதிகம் சாப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
பலாப்பழ நன்மைகள்
நீரிழிவு நோயாளிகள்
பழுத்த மற்றும் பழுக்காத பலாப்பழங்கள் இரண்டும் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டுள்ளன.
எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவுகின்றன. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக பிரச்சினைக்கு
சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.
தோல் பிரச்சினைக்கு
வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்.
நரம்பு பிரச்சினைகளுக்கு
நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
தைராய்டு
தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம்.
பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை அது அதிகம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாபழமரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
கண் குறைபாடு பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘A’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே.
மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
மூளை வளர்ச்சி
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்..
உடலும் ஊட்டம் பெறும். பலாப்பழத்திலுள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடல் இளமை தோற்றத்தை பெற உதவுகிறது.
எலும்புகள் பலமடையும்
பலாப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. பலாப்பழம் சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் எலும்புகள் வலுவாகி ஆஸ்டியோபோரஸ் போன்று உருவாகும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது.
இரத்த சோகை
உடலில் புதிய இரத்தம் உருவாக பலாப்பழத்தில் இரும்பு சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, புரத சத்துக்கள், அதிகமாக பலாப்பழத்தில் அடங்கியுள்ளது.
இரத்த சோகை உள்ளவர்கள் யோசிக்காமல் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை விரைவில் குணமாகும்.
குடல் புற்றுநோய்
குடலில் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது. மேலை நாடுகளில் பலர் இறக்க காரணமாக இந்த குடல் புற்று நோய் இருக்கிறது.
எனவே பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது.
எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.
தலைமுடி
இன்றைய காலக்கட்டத்தில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் ‘எ’ சத்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.
தீமைகள்
-
எந்த அளவிற்கு பலாவில் நன்மைகள் உள்ளதோ ஒரு சில கெடுதலும் உள்ளது. அதில், பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
-
பலாபழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
-
அடுத்த், பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம்.
- இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும். பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். குடல் வால் சுழற்சி எனப்படும் அப்பண்டிசைடிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.