தைராய்டு பிரச்சினைக்கு முற்றிலும் முற்றிலும் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு சூப் மட்டும் போதும்
தைராய்டு பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பாதித்து வரும் நிலையில், இவற்றினை சரிசெய்ய நாம் வீட்டிலேயே கஷாயம் செய்து பருகினால் சரியாகுமாம்.
தைராய்டு
தைராய்டு பிரச்சினை என்பது கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இவை வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேலை செய்கின்றது.
தவறான உணவு பழக்கத்தினால் ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
மிகச்சிறிய உறுப்பாக இருந்தாலும், இதன் செயல்பாடு மிக முக்கிய பங்காக இருக்கின்றது. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும்.
தைராய்டு காரணமாக, உடல் எடையும் வேகமாக அதிகரிக்க தொடங்குகிறது. மறுபுறம், தைராய்டு காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.
தைராய்டு ஹார்மோன் சமநிலையின்றி இருக்கும்போது, பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன.
தைராய்டை குணப்படுத்தும் சூப்
தேவையான பொருட்கள்
கேரட், பாசிப்பருப்பு, உப்பு, கருப்பு மிளகு
செய்முறை
கடாய் ஒன்றில் நெய்யை ஊற்றி அதில் நறுக்கிய கேரட்டை போட்டு வதக்க வேண்டும். பின்பு ஊற வைத்த பருப்பை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுவைக்கு தகுந்தாற் போல் கொதிக்க வைக்கவும்.
நன்றாக வேகும் வரை மூடி வைத்து 10 -15 நிமிடங்கள் சமைக்கவும். நன்றாக ஆறிய பின் இப்போது அதை ஒரு பிளெண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொண்டு பின்பு பவுல் ஒன்றில் மாற்றி மிளகுதூள் மேலே தூவி சாப்பிடலாம்.
குறித்த சூப் தைராய்டு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்கும் தன்மை கொண்டது.