தொண்டைப் புற்று நோய்க்கான அறிகுறிகள் இதுதான்: எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்!
உலகளவில் அனைவரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி தான் இந்த புற்றுநோய்.
இந்தப் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் புகையிலை உண்ணுவதாலும், மது பழக்கத்தைக் கொண்டிருப்பதாலும், குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதாலும் அதிக உடல் எடை கொண்டிருப்பதால் தான் இந்த புற்று நோய் உடலை ஆட்கொள்கின்றது.
இந்த நோய் உடம்பில் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வாய்ப்பகுதியில், வயிறு மற்றும் மார்பக பகுதியில் தான் உண்டாகிறது.
இந்தப் புற்றுநோயின் ஒரு வகைதான் தொண்டைப் புற்றுநோய் இந்தத் தொண்டைப்புற்று நோயானது தொண்டையில் பல பகுதிகளை பாதிக்கிறது.
தொண்டை புற்றுநோய் தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களைப் பொறுத்து, வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
- தொற்றைப்புற்று நோய் இருப்பவர்களுக்கு எந்த உணவை எடுத்தாலும் உணவை சாப்பிடும் போது விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும், திரவ உணவுகளை விழுங்குவதில் சிரமமாக இருக்கும்.
- மார்பு அல்லது முதுகு வலி
- இருமல் வந்துக் கொண்டே இருக்கும்
- அடிக்கடி வாந்தி, எழும்புகளில் வலி, உடல் எடை இழப்பு
- எந்த பணிகளையும் செய்ய முடியாமல் சோர்வாக இருத்தல்
- நெஞ்சில் எரிச்சல் தன்மை
- இருமும் போது இரத்தம் வருதல்
- எந்த உணவை விழுங்கும் போதும் வலி ஏற்படல்
- தொண்டையில் கட்டி
- காது வலி
-
பேச்சில் தெளிவின்மை