நெஞ்சு எரிச்சல் இருக்க அப்போ... பூண்டு சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா?
கடுமையான நெஞ்செரிச்சல் பிரச்சினை உடையவர்கள் உணவில் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.
அதிலும் முக்கியமாக பூண்டை பச்சையாக எடுத்துக் கொள்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்க நெஞ்செரிச்சலை மேலும் மோசமாக்க வாய்ப்பு உள்ளது.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது கீழ் மார்பு பகுதியில் எரியும் உணர்வை ஏற்படுத்தும் நிலை ஆகும். வயிற்று அமிலம் உணவுக் குழாயில் பின்னோக்கி பாயும் போது இது நிகழ்கிறது.
எனவே உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சினை இருந்தால் பூண்டு சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பூண்டு பல ஆரோக்கிய நன்மைநெஞ்செரிச்சல் என்பது நபருக்கு நபர் வேறுபடலாம். எனவே பூண்டை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. ஏனெனில் பூண்டில் சில நன்மைகளும் இருக்கிறது.
பூண்டு உங்க கொழுப்பை குறைக்கவும் புற்றுநோயில் இருந்து உங்களை காப்பாற்றவும் உதவுகிறது. பச்சையாக பூண்டு பற்களை எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் அசெளகரியம் போன்ற அமிலத்தன்மையின் அறிகுறிகளிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற உதவும்.