உடல் எடை அதிகமாக இருந்தால் புற்று நோய் வருமா?
பொதுவாக புற்றுநோய் என்பது புகைப்படித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற காரணிகளால் தான் ஏற்படும் என்று கேள்விபட்டிருப்போம்.
ஆனால் உங்கள் உங்கள் உடல் எடையும் இதற்கு காரணம் தான் எனச்சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உடல் பருமனானவர்களுக்கும் புற்றுநோய் வருமாம்.
உடல் எடையால் அதிகரிக்கும் புற்று நோய்
உலகளவில் அனைவரையும் பயமுறுத்தும் ஒரு வியாதி தான் இந்த புற்றுநோய்.
இந்தப் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் புகையிலை உண்ணுவதாலும், மது பழக்கத்தைக் கொண்டிருப்பதாலும், குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதாலும் அதிக உடல் எடை கொண்டிருப்பதால் தான் இந்த புற்று நோய் உடலை ஆட்கொள்கின்றது.
இந்த நோய் உடம்பில் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வாய்ப்பகுதியில், வயிறு மற்றும் மார்பக பகுதியில் தான் உண்டாகிறது.
அதாவது ஒருவரின் உடல் எடை அதிகமாக இருந்தால் அது புற்றுநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்குமாம்.
அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு செல்கள் அடர்த்தியானதாக இருக்கும் இதனால் உடலுக்கு செல்லும் ஒக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டு புற்று நோய் ஏற்பட காரணமாக அமைகிறது.
புகைப்பிடித்தலை விட உடல்பருமனால் தான் புற்றுநோய் ஏற்படுகிறது என ஆய்வில் வெளியாகியுள்ளது.
மேலும், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பதும் உடல் பருமன் தான் என்கிறது ஆய்வு.
உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பதுதான்.. ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது, புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என ஆலோசனைக் கூறியிருக்கிறார்கள்.