சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவர்களாம்...
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில குணங்கள் பெண்களுக்கு இன்றியமையாதது.
இந்த குணங்கள் இருக்கும் பெண்கள் தங்களின் கணவனுக்கு மிகச்சிறந்த துணையாக திகழ்ந்து புகுந்த வீட்டையே சொர்க்கமாக மாற்றும் தன்மை கொண்டவர்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அப்படி சிறந்த துணையாகவும் குடும்ப தலைவியாகவும் இருக்கும் பெண்களிடம் முக்கியமாக இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விசேட குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் சிறந்த குடும்ப பெண்களிடம் நிச்சயம் குடும்பத்தை முழுமையாக பொறுப்பேற்று நடத்தும் ஆற்றல் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு பெண் நிதி ரீதியில் சரியான முகாமைத்துவம் கொண்டவராகவும் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு பெண் அதை சரியாக நிறைவேற்றினால், குடும்பத்தை அனைத்து விதமான சிரமங்களிலிருந்தும் பாதுகாத்து குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொடுக்க முடியும்.
மனக்கட்டுப்பாடு கொண்ட பெண் நிதானத்துடனும் சமநிலையுடனும் விஷயங்களைக் கையாளும் பெண்கள் குடும்பத்தை சரியாக வழிநடத்துவார்கள் இவர்கள் எப்போதும் குடும்பத்தில் அனைவரின் விருப்பங்களுக்கும் முக்கியத்தும் கொடுப்பார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் சிறந்த துணையாக இருக்கும் பெண்கள் ஒருபோதும் அவசரத்தில் முடிவெடுக்கவே மாட்டார்கள். இவர்கள் எப்போதும் நிதானத்துடனும் பல முறை ஆய்வு செய்தும் முடிவுகளை எடுக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
சாணக்கியரின் கருத்துப்படி சிறந்த குடும்ப தலைவிகளுக்கு முகத்தின் அழகை விடவும் மனதின் அழகு முகவும் சிறப்பாக இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
திருமண வாழ்வில் புகுந்த வீட்டுக்கு செழிப்பையும் மகிழ்சியையம் சேர்க்க வேண்டும் என்றால் அந்த பெண்களிடம் நிச்சயம் திருமண பந்தத்தை மதிக்கும் குணம் இருக்க வேண்டும். திருமணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களால் மாத்திரமே சிறந்த துணையாக இருக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |