இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக அர்த்தம்
இதயத்தில் பிரச்சனை ஏற்படுகின்றது என்பதை சில அறிகுறிகளை வைத்து நாம் அறிந்து கொள்ள முடியும். குறித்த அறிகுறிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியம்
உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கித்தினையும் கட்டுக்குள் வைத்திருக்கும் உறுப்பு இதயம். இதயம் தடை இல்லாமல் இயங்கினால் மட்டுமே அனைத்து உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைய காலத்தில் ஆரோக்கியற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தினால் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகின்றது.

கொழுப்புகளால் ஏற்படும் இந்த அடைப்பினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதய நோயினை ஏற்படுத்துகின்றது. இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதாக இருந்தால், சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அவ்வாறு தெரியும் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் இறுதியில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். தற்போது முக்கியமான அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அறிகுறிகள் என்ன?
நெஞ்சில் வலி மற்றும் அழுத்தம் அதிகமாக இருந்தால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நெஞ்சு பகுதியில் வலி இல்லாமல் பாரமோ, அழுத்தமோ காணப்பட்டால் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக அர்த்தம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் தருணத்தில் இந்த அறிகுறிகள் முக்கியமாக இருக்கும்.
அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் காணப்பட்டால் அலட்சிம் கொள்ளக்கூடாது. அதாவது மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்கவில்லை என்றால் இந்த பிரச்சனை ஏற்படும். இரத்த குழாய்களில் அடைப்பு காணப்பட்டால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு இந்த அறிகுறிகளைக் காட்டும்.

கை மற்றும் கழுத்து, தாடை பகுதியில் வலி ஏற்பட்டால் அதனை அலட்சியமாக எடுக்கக்கூடாது. அதாவது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் இவ்வாறான வலியை சந்திக்க நேரிடும். ஆதலால் உடனே மருத்துவரை பார்க்கவும்.
மூச்சுவிடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். அதாவது சிறிய வேலைகள் செய்யும் போது, எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் தமனியில் அடைப்பு இருப்பதாக அர்த்தம். இவை இதயத்தின் தீவிர பிரச்சனையை காட்டுகின்றது.

நன்றாக தூங்கி ஓய்வு எடுத்த பின்பும் களைப்பாகவோ, சோர்வாகவோ இருந்தால் ரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். காரணம் இதயம் ரத்தத்தினை பிற உறுப்புகளுக்கு சரியாக அனுப்பாமல் இருப்பதற்கான அறிகுறியே இந்த விவரிக்க முடியாத சோர்வு ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |