இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ மாரடைப்பு உறுதி... ஜாக்கிரதை
உலகத்தில் தற்போது பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரையும் பறி கொடுக்கின்றனர். மிகவும் முக்கியமாக மாரடைப்பால் இறப்பவர்கள் அதிகம்.
இதய நோய் என்பது ஒருவருக்கு ஒரே நாளில் வராது திடீரெனவும் வராது. நமது அன்றாட பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாக்கி அது நாளடைவில் மாரடைப்பை கொண்டு வரும்.
தற்போது இருக்கும் தலைமுறையினோர்கள் எல்லாம் சரியான வாழ்க்கை முறை இல்லாமல் பணத்தையம் ஆடம்பரத்தையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

இது தவிர சிகரெட், ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களையும் பலர் கொண்டுள்ளார்கள். இவை அனைத்தும் இதயத்தை மோசமாக சேதப்படுத்தி, இதய நோய்களை வரத் தூண்டுகின்றன.
அப்படி இதய நோய் வரக்கூடாது என்றால் நாம் சில விடயங்களை உண்மையில் கற்றுகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் வேண்டும். அதை பற்றி பார்க்கலாம்.

பழக்கங்கள்
அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பது
- தற்போதைய வேலை கலாச்சாரம் பலரை நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர வைக்கும். இதனால் ரத்த ஓட்டம் மந்தமாகி, கெட்ட கொழுப்பு சேர்ந்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
- இதைத் தவிர்க்க, வேலை நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறிய நடைப்பயிற்சி செய்ய வேண்டும். முடியாவிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் நடை அல்லது எளிய உடற்பயிற்சி செய்யும் பழக்கம் முக்கியம்.
ஒழுங்கான தூக்கமின்மை
- தற்போது இருப்பவர்கள் போதுமானளவு தூங்குவது இல்லை. இதனால் உடலில் பல நோய்கள் வரக்கூடும். ஆனாலும் முழுமையாக தூங்காதது நமக்கு மாரடைப்பு வரும் அபாயத்தை அதிகரிக்கும்.
- எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ அவ்வளவு நேரம் தூங்கி எழும்புவது அவசியம். கூடவும் தூங்க கூடாது குறையவும் தூங்க கூடாது.

மாரடைப்பு அறிகுறிகளை புறக்கணிப்பது
- தற்போது உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, அடிக்கடி படபடப்பு போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதுசிலர் சாதாரணமாக விடுகின்றனர். ஆனால் இது மாரடைப்பின் அறிகுறியாகும்.
- இப்படி உடல் நமக்கு தெரியப்படுத்தும் அறிகுறிகளை புறக்கணித்தால், பின் மோசமான நிலையில் மருத்துவரை பார்த்தால் கூட அது நமக்கு பயனளிக்காது. சிகிச்சை பெறுவது கடினம்.
ஆரோக்கியம் இல்லாத உணவுகள்
- தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், கார்ன் ப்ளேக்ஸ் போன்றவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம். ஆனால் இதன் சுவைக்காக இதன் கெட்டது அறியாமல் அதை வாங்கி சாப்பிடுகிறோம்.
- இப்படி சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் அது உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடலினுள் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலை மாரடைப்பு வருவதை அதிகமாக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |