இணையத்தை கலக்கும் சினேகன்-கன்னிகா மகள்களின் பிறந்த நாள்! கொண்டாட்டத்தை பாருங்க
சினேகன், கன்னிகா தம்பதிகளின் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை திரண்டு வந்து வாழ்த்தியுள்ள காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
சினேகன்-கன்னிகா
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை எழுதி பாடல் ஆசிரியராக தனது அற்புதமான வரிகள் மூலம் ரசிகர்களில் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சினேகன்.

பிரபல பாடலாசிரியரான சினேகன் 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.
70 திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கும் சினேகன், தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கிறார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பல வெற்றிப்பாடல்களை எழுதியது இவர் என பலருக்கு தெரியவந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்,கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.

இதற்கிடையில், சினேகன் கடந்த 2021ம் ஆண்டு தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

பெண் குழந்தைகளுக்கு சினேகன் கமல்ஹாசன் முன்னிலையில் அழகான தமிழ் பெயர்களான காதல், கவிதை என பெயர் வைத்தார்.
இந்நிலையில், சினேகன், கன்னிகா தம்பதிகளின் செல்ல மகள்களுக்கு முதல் பிறந்த நாள் விழா தடபுடலாக கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |