உங்களின் இந்த பழக்கங்கள் நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்: இனிமே செய்யாதீங்க
தற்போது யாரை எடுத்துக் கொண்டாலும் வயது வித்தியாசமே இன்றி நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது, உணவுப் பழக்கவழக்கம்தான். நாம் உண்ணும் உணவானது ஆற்றலாக மாறுவதற்கு உள்ளுறுப்புக்களின் செயல்பாடு சீராக நடைபெற வேண்டும்.
அதாவது, கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்யமுடியாத போது, அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் உண்டாகிறது.
இருப்பினும் நாம் அன்றாடம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தாலே நீரழிவு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
அவை என்னவென்று பார்ப்போம்...
தயிர் சாப்பிடுதல்
தயிர் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் தினமும் தயிர் சாப்பிட வேண்டும் என்று யாரும் கூறவில்லை.
ஏனென்றால் தினமும் தயிர் சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.
image - metropolis
அதிகமாக சாப்பிடுதல்
எப்பொழுதுமே வயிற்றுக்குப் போதுமான அளவு உணவு உண்பதே சிறந்தது. தட்டில் உள்ள அனைத்து உணவையும் வீணாக்காமல் உண்ண வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுவதால் அதிகமாக உண்ண ஆரம்பிக்கின்றோம்.
எனவே உணவை ஆரம்பத்திலேயே சரியான அளவில் தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதிகமாக சாப்பிடுவது, ஜீரணக் கோளாறு, கொலஸ்ட்ரோல், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு வித்திடும்.
image - myfitness pill blog
தாமதமாக சாப்பிடுதல்
இரவு நேரங்களில் உணவை தாமதமாக சாப்பிடுவது என்பது செரிமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுமாத்திரமின்றி இது ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும்.
image - emedihealth
பசியின்றி உண்ணுதல்
ஒரு சிலர் பசி எடுக்காமலேயே கொஞ்ச சிறிது நேரத்துக்கு ஒரு தடவை எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பர்.
இவ்வாறு பசி எடுக்காமலேயே தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பது இன்சுலின் உணர்திறனை குறைத்துவிடும்.
இது குடல் வீக்கத்தை அதிகரித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தி இறுதியில் நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து விடுகின்றது.