இரவில் இந்த பழங்களை சாப்பிடவே கூடாதாம்... ஏன்னு காரணம் தெரியுமா?
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பழங்கள் ஆரோக்கியமானதாக காணப்பட்டாலும் இரவு நேரத்தில் சில பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படுமாம்.
பொதுவாக பழங்களில் வைட்டமின்கள், தேவையான தாதுக்கள் அடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் காணப்படுகின்றது.
அந்த வகையில் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
சாப்பிடக்கூடாத பழங்கள்
ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் என்று கூறப்படும் ஆப்பிளில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றது. ஆனால் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிட்டால் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை அளிக்கின்றது. ஆனால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், ஜீரணத்திற்கும் அதிக நேரம் எடுப்பதுடன் தூக்கமும் பாதிக்கும்.
ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிக ஆரோக்கியம் அளித்தாலும் இரவு நேரத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். ஆதலால் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கோடைகாலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருந்தாலும் இரவு நேரத்தில் இதனை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதிகமான ஊட்டச்சத்தைக் கொண்ட சப்போட்டா பழம் உடல் சோர்வை நீக்கி, கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் ஆற்றலின் அளவை அதிகரிப்பதே காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
