நறுக்கிய ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவினால் என்ன நடக்கும்?
ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிறிய துண்டு பழங்கள் இருந்தாலும், அதில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
அந்த வகையில் குழந்தைகள் பாடசாலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் துண்டுகளாக்கி ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொண்டு செல்வது வழக்கம்.
சில பழங்கள் சிறிது நேரம் வெட்டி வைத்தால் கூட நிறமாற்றம் ஏற்படும். அதிலும் ஆப்பிள்கள் முக்கியம் பெறுகின்றன.
குழந்தைகள் சாப்பிடுவதற்கு எடுக்கும் பொழுது பழுப்பு நிறமாக இருந்தால் வீணாகி விட்டது என எண்ணி சாப்பிடாமல் கூட கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இப்படியான சிக்கல்களை தடுப்பதற்கு பழங்களை வெட்டிய உடன் சில பொருட்களை கலந்து வைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இது ஆய்வுகளிலும் உறுதிச் செய்யப்பட்டவையாகவே இருப்பது அவசியம்.
அப்படியாயின், ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவி வைத்தால் என்ன நடக்கும், வேறு என்னென்ன டிப்ஸ்கள் உள்ளன? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிளின் நிறம் மாற்றித்திற்கான காரணம்
- ஒரு ஆப்பிளை துண்டுகளாக வெட்டி வைக்கும் பொழுது, அதனுடன் ஆக்ஸிஜன் செல்கள் நுழைந்து நொதிங்களை உருவாக்கும். இதனால் ஒரு வேதியியல் எதிர்வினையை தூண்டுகிறது. இதன் விளைவாக பழத்தின் மீது ஆக்ஸிஜனேற்றம் நடந்து ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுகிறது. இதனால் சுவையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
எலுமிச்சை சாறு சேர்த்தால் என்ன நடக்கும்?
- எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத்தன்மை ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மெதுவாக்கும். இதனால் ஆப்பிள் வெட்டி சிறிது நேரம் சென்றதும் எலுமிச்சை சாற்றை பிழியவும். இது ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுவதை தடுத்து, புதிய பழம் போல் வைத்திருக்கும்.
வினிகர் சேர்த்தால் என்ன நடக்கும்?
- எலுமிச்சை சாறு போல வினிகரையும் பயன்படுத்தலாம். ஆப்பிள் துண்டுகளில் வினிகரை கலந்து வைத்தால் பழுப்பு நிறமாக மாறாமல் அப்படியே இருக்கும் தண்ணீரில் சிறிது வினிகரை கலந்து குழந்தை கொடுத்து வந்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
