இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம்! மீன்களை தவிர்த்து எதில் அதிகமாக இருக்கின்றது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்களைத் தவிர எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒமேகா 3
இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் வீக்கத்தினைக் குறைப்பதற்கு அவசியமான ஒன்றாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படுகின்றது.
சால்மன், மத்தி மீன்களில் அதிகமாக காணப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலின் செல் சவ்வுகளைக் கட்டமைத்து, நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துகின்றது.
நம்மில் பெரும்பாலானோர் மீன்களில் மட்டுமே இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற சில வகையான உணவுகளிலும் நிறைந்துள்ளது.
அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள்
கொட்டை வகைகளில் ஒன்றான வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. அதாவது 35 கிராம் வால்நட் சாப்பிட்டால் 2,500 mg அளவிற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கின்றது. ஆகவே தினமும் சில வால்நட் சாப்பிடுவது சிறந்ததாகும்.
மீன்களில் சால்மன் மீன்களைத் தவிர்த்து மத்தி மற்றும் கெழுத்தி மீன்களில் அதிகமாக ஒமேகா 3 இருக்கின்றது. இந்த வகை மீன்களில் 50 கிராமில் 2000mg ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்குமாம்.

இதே போன்று சியா விதையிலும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. வெறும் 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டால் அதில் 5,000 mg அளவிற்கு ஒமேகா 3 கிடைக்கின்றதாம்.
Hemp Seeds என்று அழைக்கப்படும் சணல் விதை ஒரு ஸ்பூனில் 850mg அளவிற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கின்றதாம்.

மூரண் கெண்டை அல்லது வெங்கணா (Herring Fish) என்று அழைக்கப்படும் மீனில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. அதாவது 100 கிராம் மீன் எடுத்துக் கொண்டால் 1700 mg அளவிற்கு ஒமேகா 3 கிடைக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |