அக்டோபர் முழுவதும் அதிர்ஷ்டம்! லட்சுமி நாராயண ராஜயோகத்தால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியாக அக்டோபர் மாதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல மங்களகரமான யோகங்களும் உருவாகின்றன.
அவற்றில் முக்கியமான ஒன்றுதான் லட்சுமி நாராயண ராஜயோகம். புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் இந்த ராஜயோகம், துலாம் ராசியில் ஏற்பட்டுள்ளது.

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், அவரது சொந்த ராசியில் இந்த யோகம் உருவாகியிருப்பது மேலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தையும், சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பையும் குறிக்கின்றனர்.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம், நிதி மற்றும் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களை வழங்கும் எனக் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் இந்த மங்களகரமான ராஜயோகம் நீடிப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் சாததக பலன்களை கொடுக்கும் என ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அக்டோபர் மாதம் முழுவதுமே நிதி நிலையிலும், தொழில் விடயங்களிலும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் 2-வது வீட்டில் புதன்–சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் புத்திசாலித்தனம் மற்றும் திறமையால் வேலை, தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.
பேச்சுத்திறன் மூலம் புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். மொத்தத்தில் தொழில் சிறந்து, வருமானம் அதிகரிக்கும். மனநிலையிலும் அமைதி உண்டாகும்.
தனுசு

தனுசு ராசியின் 11-வது வீட்டில் புதன்–சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய நட்புகள் மூலம் தொழிலில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்

மகர ராசியின் 10-வது வீட்டில் புதன்–சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் காணலாம்.
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், ஊதிய உயர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகலாம். குறிப்பாக தொழில் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |