தினமும் காலையில் ஊறவைத்த புதினா தண்ணீர் குடிங்க - நன்மைகள் ஏராளம்
வீட்டில் இருக்கும் புதினாவை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் உடலுக்கு ஏராளம் நன்மைகள் கிடைக்கும் அந்த நன்மைகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

புதினா தண்ணீர்
சமையலுக்கு பயன்படும் புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளது. பொதுவாக புதினா உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதில் நிறைய சத்துக்களும் உள்ளன.
குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் புதினா சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். தினமும் புதினா சாப்பிட்டால் உங்களுடைய வாய் சுகாதாரம் மேம்படும்.
இதன்படி காலையில் புதினா தண்ணீரை குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும். அந்த நன்மைகள் என்னவென்பதை பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள்
வாயு மற்றும் வயிற்று உப்புசத்தை நீக்குகிறது - உங்களுக்கு அடிக்கடி வாயு, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையால் பிரச்சனை இருந்தால் அதற்கு புதினா நீர் மிகவும் நன்மை தரும்.
புதினா நீரில் உள்ள சத்துக்கள் வாயு, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அமிலத்தன்மையைப் போக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த குளிர்ச்சியான பானம் பெரும்பாலும் கோடை காலத்தில் குடிப்பது நல்லது.

புதினா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், வெப்பத் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், நீங்கள் புதினா தண்ணீர் குடிக்கலாம். இந்த நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும், எடை இழப்பு பயணத்தை எளிதாக்கவும் இது உதவும். மிக முக்கியமாக காலையில் எழுந்தவுடன் புதினா நீர் குடிப்பது உங்கள் மன அழுத்தத்தை தடுக்க உதவும் எனப்படுகின்றது.

தயாரிக்கும் முறை - முதலில், ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் 10,15 புதிய புதினா இலைகளைச் சேர்க்கவும். புதினா நீரின் சுவையை அதிகரிக்க, நீங்கள் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சி அல்லது கருப்பு உப்பு சேர்க்கலாம்.
இந்த தண்ணீரை சில மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள், இந்த தண்ணீரை சிறிய அளவில் குடிக்கலாம். டீ காபி க்கு பதிலாக இதை செய்யலாம். இது உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |