சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசினரின் பலன் இதோ
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி இன்னும் இரண்டு தினங்களில் நடைபெறும் நிலையில் 12 ராசியினருக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி பெயர்ச்சி
பொதுவாக ஜோதிடத்தில் மிக முக்கிய கிரகங்களில் ஒன்றாக சனி இருக்கின்றது. சனி பகவான் ஒழுக்கம், கர்மம், நீதி, நேர்மை இவற்றிற்கு காரணியாக இருக்கின்றார்.
மகரம் மற்றும் கும்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். அடிக்கடி தனது நட்சத்திரத்தினை மாற்றுகின்றார்.
தற்போது மீன ராசியில், ரேவதி நட்சத்திலும் பயணித்து வரும் சனி பகவான் வரும் 9ம் தேதி ரேவதி நட்சத்திரலிருந்து வக்ர நிலையில், உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார்.
இந்நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். பிப்ரவரி 8, 2027, சுமார் 83 நாட்கள் பயணிக்க போகின்றார். இந்த பயணத்தில் சில ராசியினருக்கு நன்மையாகவும், சிலருக்கு மோசமானதாக இருக்கலாம். அந்த வகையில் 12 ராசியினரின் பலன்களை தற்போது தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு சாதாரணமாக இந்த நட்சத்திர பெயர்ச்சி இருக்கும். வேலையில் கவனம், முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது வேண்டும். பயணங்களில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். செல்லும் வேலையும் வெற்றியாக முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும். பல வழிகளிலிருந்து நல்ல செய்தி கிடைப்பதுடன், நிதி ஆதாயமும், புதிய வருமான வழியும் உருவாகும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி முன்னேற்றததிற்கான வாய்ப்பாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதுடன், நீண்ட தூய பயணங்களை தவிர்க்கவும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், அலுவலகத்தில் அதிக பொறுப்புகளால் கடின உழைப்பு தேவைப்படும்.

கடகம்
கடக ராசியினருக்கு நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதுடன், வேலை தேடிபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும் நிலை உள்ளது. பணியிடத்தில் செய்யும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், நிலுவையில் இருந்த வேலையும் சிறப்பாக முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றத்தினால், மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கடின உழைப்பினால் பணியிடத்தில் பாராட்டை பெறுவதுடன், சமூகத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் கை சேரும்.

கன்னி
கன்னி ராசியினர் இந்த நட்சத்திர பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிதாக தீட்டும் திட்டங்கள் வெற்றியடைய வாய்ப்புள்ளது. ஆனால் அவசரப்பட்டு எதையும் செய்வதை தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசியினர் இந்த பெயர்ச்சியால் கடின உழைப்பிற்கான பலனை பெறுவதுடன், தொழிலிலும் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். வணிக வியாபாரத்தில் நல்ல ்லாபம் கிடைப்பதுடன், பணியிடத்தில் எடுக்கும் முயற்சியும் வெற்றியடையும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு சனி பகவானால் அதிக பிரச்சனையை சந்திக்கும் நிலையில், எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வேலையில் ஏற்ற இறக்கமும் இருக்கும். புதிய நட்பும் கிடைப்பதுடன், நட்பால் வாழ்க்கையும் நன்றாக இருக்குமாம்.

தனுசு
தனுசு ராசியினருக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன் கிடைப்பதுடன், முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வி பயில மாணவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. நல்ல நிதி ஆதாயத்தையும், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினருக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இழப்புகள் சந்திக்க நேரிடுமாம். ஆனாலும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். நிதி விடயங்களில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. யோசிக்காமல் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அளிப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும்.
நீண்ட கால கடின உழைப்பின் பலன்களை இக்காலத்தில் பெறுவதுடன், நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படுகின்றது, பணப்பிரச்சனையும் தீருமாம்.
மீனம்
மீன ராசியினர் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியில் வாழக்கை சிறப்பாக இருப்பதுடன், தொழில் மற்றும் நிதி விடயங்களில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். பெற்றோருடன் நேரத்தினை செலவு செய்வீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தினையும் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |