மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? இந்த உணவை கட்டாயம் சேர்த்துக்கோங்க
மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முழங்கால் வலி
முழங்கால் வலி என்பது இன்று பெரும்பாலான நபர்களை கஷ்டப்படுத்தும் ஒரு வியாதியாக இருந்து வருகின்றது. இந்த மூட்டுவலியின் காரணமாக நாம் விரும்பும் இடங்களுக்கு சென்றுவருவதற்கு முடியாமல் தவிர்த்தும் வருகின்றோம்.
குறுத்தெலும்பு தேய்மானம், உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது, தசைநார் காயங்கள், அதிக எடை இவை மூட்டு வலிக்கு முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இன்று 40 வயதை கடந்துவிட்டாலே பலரும் மூட்டுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். அதே போன்று சில வகையான உணவுகளும் மூட்டுவலிக்கு காரணமாக இருக்கின்றது.
ஆனால் சில உணவுகள் மூட்டுவலி பிரச்சனைகளை போக்குவதற்கு உதவும். அவைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான சால்மன், மத்தி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெய்யில் ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள், கால்சியம் நிறைந்த உணவுகளாக பால் இவற்றினை சேர்த்துக் கொள்வதால் மூட்டு ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.

இஞ்சி, மஞ்சள், பூண்டு, நட்ஸ் விதைகள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களையும் உட்கொள்ளலாம்.
காய்கறிகளில் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பு சூப்பும் மூட்டு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

சிவப்பு இறைச்சி, சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது அருந்துதல், அதிகப்படியான உப்பு இவற்றினை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |