இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க.. மன வலிமை கொண்ட ராசியினர்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேரை்மறை எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதாத்திய மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி கடினமான சூழ்நிலைகளிலும் அசாத்திய மன வலிமையுடன் இருக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் பெரும்பாலும் ராசியின் சக்தி வாய்ந்ததாகப் புகழப்படுகிறது. இந்த ராசியில் பிறந்த பெண்கள் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள தயங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
இருப்பிலும் கடினமாக சூழ்நிலைகளையும் சீராக கடக்கும் அதீத மன உறுதி இவர்களிடம் இருக்கும்.இவர்கள் தனித்திருந்தாலும் வலிமையுடன் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க யாராயும் எதிர்ப்பார்ப்பது கிடையாது. பெண் சிங்கள்கள் போல் தங்களை காப்பாற்றிக்கொள்ள தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் ராசியின் மூலோபாயவாதிகளாகவும், நடைமுறை சிந்தனையாளர்களாகவும் அறியப்டுகின்றார்கள்.
இவர்பகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஈடுகொடுக்க ஆடியாதளவுக்கு அசாத்திய மனவலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசி பெண்களை வெல்லுவதும் இவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதும் பெரும் சவாலான விடயமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே உணர்வுகளை விட யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் மன வலிமை அவர்களின் புறநிலைத்தன்மை மற்றும் நாடகம் அல்லது உணர்ச்சிகளால் பாதிக்கப்பட மறுப்பதில் வெளிப்படுகின்றது.
இவர்களை மனவருத்தப்பட வைப்பது இயலாத காரியம். இவர்கள் கவரலயிலும் தங்களின் பணிகளை சீராக செய்யும் திறன் கொண்டவர்கள். இவர்களின் மன வலிமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).மனிதன் திரைப்படம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |