இந்த 2 பொருள் கலந்து போடுங்க.. நார் மாதிரி இருக்கும் முடி காடு மாதிரி வளரும்!
பொதுவாக கோடைக்காலம், குளிர்காலம் காலநிலை மாறி மாறி வரும் பொழுது தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
எந்த எந்த காலமாக இருந்தாலும் தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்கும் பொழுது தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வியர்வையால் அரிப்பு மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் வரலாம். இதுவும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் அச்சம் உள்ளது.
வெறும் தலைமுடி உதிர்வு மாத்திரம் பிரச்சினையல்ல, மாறாக தலை முடி வறட்சி, நுனி முடிபிளவு உள்ளிட்ட பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு தலைமுடி பராமரிப்பு செய்வதிலும் பார்க்க இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிக்கும் பொழுது பலன் இரட்டிப்பாக கிடைக்கிறது.
கருமையான தலைமுடியை பெறுவதற்கும் ஒரு சிறந்த இயற்கை வைத்தியம் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
தேங்காய் எண்ணெய் இயற்கையாக கிடைக்கும் பொருள் என்றாலும் அதில் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடிக்கு தேவையான ஈரப்பதம் வழங்கி, தலைமுடி வேர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறது. அத்துடன் தலைமுடி பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும். இதனை தான் அக்கால பெண்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதனால் அவர்கள் தலைமுடி வயதானாலும் அதே ஆரோக்கியத்தில் உள்ளது.
பயன்பாடு
- சுடுநீரில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து சூடாக்கவும்.
- அதனை விரல்களால் எடுத்து நன்றாக மசாஜ் செய்யவும்.
- அப்படி செய்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவிடவும்.
- அதன் பின்னர், மென்மையான ஹெர்பல் ஷாம்பூவால் கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. தேன் (Honey)
தேன் என்பது ஒரு இயற்கையாக கிடைக்கும் பொருள். இதனை கொண்டு தலைமுடிக்கு ஈரப்பதம் கொடுக்க முடியும். தலைமுடி பயன்படுத்தி வந்தால், காலப்போக்கில் தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் பார்க்கலாம். அதே சமயம், பாக்டீரியா எதிர்ப்பு சக்தியும் உள்ளது
பயன்பாடு
- 2 மேசைக்கரண்டி தேன், 4 மேசைக்கரண்டி சூடான தண்ணீரில் கலந்து தலைமுடிக்கு தேய்க்கவும்.
- 20 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
- தேங்காய் எண்ணெய் பயன்படுத்திய நாளில் இதை தவிர்க்க வேண்டும்.
- மாறி மாறி பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |