Ethirneechal: ரசிகர்களுக்கு அதிர்ச்சி- மரணத்தை நெருங்கிய ஈஸ்வரி? பரபரப்பான அப்டேட்
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த வாரம் ஈஸ்வரி இறந்து விடுவதைப்போன்று காட்டலாம் என பேசப்படுகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பு கொண்ட ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. இந்த சீரியலுக்கு ஒரு உத்வேகமே நான்கு மருமகள்கள் தான்.
இந்த சீரியலில் ஆணாதிக்கத்தை எதிர்ந்து பெண்கள் சண்டை போட்டு வெற்றி பெறுவது போல கதைக்களம் அமைக்கபட்டிருக்கும். இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் முக்கிய வில்லனாக மாரிமுத்து நடித்து வந்தார்.
ஆனால் அவர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் இந்த சீரியலில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் பாகத்தை பாதியிலேயே முடித்துவிட்டு இரண்டாவது பாகத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டார்.
இந்த இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வந்த மதுமிதா விலக, அவருக்கு பதிலாக பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரும்பாலும் மற்ற நடிகர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றனர்.
இதில் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பது தர்சன் திருமணம் தான். இது முதல் பாகத்தில் வந்த கரிகாலன் ஆதிரை திருமணத்தைப் போல அமைந்துள்ளது.
கோமா நிலையில் ஈஸ்வரி
இதில் தர்சன் பார்கவியை விரும்புவதால் அவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இப்படியாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் சண்டை முற்றி, குணசேகரன் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கீழே தள்ளி விடுகிறார்.
இதில் தலையில் பலமாக அடிபட்டு ரத்த களத்தில் இருந்த ஈர்வரியை ரேணுகா தர்சன் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஈஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து கனிகா வெளியேறப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றது. இது அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
பரபரப்பான கதைக்களம்
இந்நிலையில் கோமா நிலையில் இருக்கும் ஈஸ்வரி மரணமடைவது போல காட்சிகள் காட்டப்படும் என பேசப்படுகிறது, ஒருவேளை இது நடந்தால் தொடர்ந்து பெண்கள் தோற்பது போல காட்சிகள் வருவதால் எதிர்நீச்சல் மீதான ரசிகர்களின் கோபம் அதிகரிக்கலாம்.
குணசேகரனின் கை ஓங்கி இருப்பது போன்றே காட்சிகள் அமைக்கப்படுகிறது, இத்தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |